''இனிய சொற்கள்.''


''இனிய சொற்கள்.''



வளமான வாழ்வை உருவாக்குவதில்
இனிய சொற்கள்
மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

முதலில் ஒருவருடைய உள்ளத்தில் உருவாகும் எண்ணங்கள் தூய்மையானவையாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் ஒருவருடைய
வாய்ச்சொற்களும் இனிமை
நிறைந்தவையாக இருக்கும்.

வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் எப்பொழுதும்  வாய்மைச் சொற்களாகவே
இருக்க வேண்டும்.

நம் எண்ணங்களே சொற்களாக வெளிப்படுகின்றன.

சொற்களே செயல்களாக மலர்கின்றன.

எனவே,
எண்ணம்,சொல்,செயல்
இவை
மூன்றுக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு.

எனினும்,
இம்மூன்றில் எண்ணமே,

 ஒருவருடைய எதிர்கால நல்வாழ்வை அமைப்பதில்

தலையான இடத்தை வகிக்கிறது.

சொல்லுக்கும்,செயலுக்கும்,
எண்ணமே வித்து.

எனவே,
நல்ல எண்ணங்களை மனதில்
எண்ணிணால்

அவை நல்ல சொற்களாக வெளிப்படும்.

நல்ல சொற்களே நல்ல செயல்களாக ஒளிரும்.

இனிய சொற்கள்தான் ஒருவருக்கு,

வேலைவாய்ப்பை அளிக்கின்றன.

அடக்கத்தைத் தருகின்றன.

பிறரிடம் நன்மதிப்பை உருவாக்குகின்றன.

பிறர் நெஞ்சில் நம் உருவத்தை
தெளிவாகப் பதிக்கின்றன.

இவரை எப்பொழுது காண்போம்,

இவரிடம் எப்பொழுதுபேசுவோம்,

என்னும் பேராவலை உற்பத்தி
செய்கின்றன.

மக்கள் கூட்டமாக நம்மை மொய்த்திருக்கச் செய்கின்றன.

அனைத்திற்கும் மேலாக ஒளிமயமான எதிர்காலத்தை
வழங்குகின்றன.

இனிய சொற்கள் பேசுபவர்க்கும் இனிமை பயக்கும் .

அதை கேட்பவர்க்கும் இனிமை பயக்கும்.

யாரிடம் எப்படி பேசவேண்டும்
என்பதே ஒரு தனிக்கலையாகும்.

Comments