மராத்தியர்களின் ஆளுமைக்கு கீழ் உள்ள தலைமை அமைச்சர்களாக இருந்த பேஷ்வா’க்கள் இராணுவத்தை கட்டுபடுத்தி வந்தனர். இவர்கள் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். சிந்து நதிக்கரை வரை ஒவ்வொரு இடத்திலும் மராத்தியர்களின் கொடி பறந்தது.
இந்த தருணத்தில் ஒரு வெளிநாட்டு மன்னரின் படையெடுப்பு நடக்கிறது. அவரின் பெயர் அஹ்மத் ஷா துரானி. ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னர் இந்தியாவிற்கு படையெடுத்த நாதிர்ஷா என்ற மன்னரின் தளபதியாக துரானி இருந்துள்ளார். தற்பொழுது துரானியின் அதிகாரத்தில் கீழ் ராஜ்ஜியம் வந்ததால் மீண்டும் படையுடன் இந்தியாவிற்குள் நுழைய முயற்சிக்கிறார்.
மூன்றாவது பானிபட் போர் வருடம் 1761, ஜனவரி 14 அன்று மராத்தா சாம்ராஜ்யத்திற்கும் அப்கானிஸ்தானின் துரானி பேரரசிற்கும் நடைபெற்றது. அகமது சா துரானியை ரோகில்லாக்கள் மற்றும் அவத் (அயோத்தியா) நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். மராத்தியர்களுக்கு உதவ இராசபுத்திர படைகளும், சீக்கிய படைகளும் முன் வரவில்லை.
இதற்கு இவர்களின் பகுதிகள் ஆக்கிரமிப்பு, இந்துக்கள் ஆதரிப்பு, வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜி பேரரசாக முடி சூட்டிய அன்று பாலாஜி விஸ்வநாத்தை தன் முதலைமைச்சராக (பேஷ்வா) நியமித்தார். அன்றிலிருந்து அவரின் வம்சாவளி மராத்தியர்களுக்கு பக்க பலமாக இராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஆளுமையை செலுத்தியது.
போருக்கான காரணங்கள்
18 ஆம் நுற்றாண்டில் மிகப்பெரிய போராக இந்த போர் வர்ணிக்கப்படுகிறது. ஒரே நாளில் பல்லாயிரம் மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடத்திய போராக பதிவாகியுள்ளது. பாலாஜி பாஜி ராவு (நானா சாகிப் என்றழைக்கப்பட்டவர்) மற்றும் அவருடைய தளபதிகள் தம்முடைய எல்லைகளை விரிவு படுத்தி கர்நாடகா மற்றும் நிஜாம் பகுதிகளை கைப்பற்றினர். பாலாஜி ராவின் மகன் ரகுநாத் ராவு வருடம் 1958 ஆண்டு பஞ்சாபின் எல்லையை ஊடுருவினார். அப்பகுதியின் வளங்களை வாரி சுருட்டிக்கொண்டு தமது விசுவாசியான அதானி பெக் என்ற சர்தார் ஒருவரை ஆளுநராக நியமித்தார். இது அந்த பகுதியின் ஆளுமைகளான ரோஹிலாக்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் சினத்தை ஏற்படுத்தினாலும் மராத்திய படைகளை கண்டு அஞ்சினர். உள்நாட்டு போரும் அதற்காக உதவி கோருவதுமே வெளிநாட்டு படைகள் நம் வளங்களை ராஜ உபச்சாரத்துடன் எடுத்து செல்ல வழி வகுத்துள்ளது. எவ்வாறு ஜெய்சந்த் மொகமத் கோரிக்கு அழைப்பு விடுத்தாரோ, தவளத் கான் பாபருக்கு அழைப்பு விடுத்தாரோ அதே போல ரோஹிலாக்களும், ராஜபுத்திரர்களும் துரானிக்கு அழைப்பு விடுத்தார்கள்.பயிற்சி பெறாத வீரர்கள்
இது துரானி சாம்ராஜ்யத்தின் நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. பாஜி ராவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தம்முடைய மாமா சதாசிவ ராவ் தலைமையில் படை ஒன்றை திரட்டுகிறார். சுமார் 45, 0௦0 முதல் 6௦, 0௦0 போர் வீரர்களை அவர்கள் குடும்பத்துடனும், 2,௦0,௦0௦ ஊர் மக்களையும் புனித யாத்திரைக்காகவும், போரின் பொழுது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காண்பிக்கவும் இப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. மராத்திய வரலாற்றிலே இது போன்ற ஒரு பலவீனமான படை இருந்தது இல்லை என சொல்லலாம். அது போக குடும்பத்துடன் வந்த போர் வீரர்கள் எவருக்கும் முழு ஈடுபாட்டுடன் போர் புரியும் எண்ணமும் இருந்ததாக காணப்படவில்லை. அவர்கள் படூர் எனும் பகுதியில் இருந்து மார்ச், 196௦ ல் வடக்கு நோக்கி பயணிக்கிறார்கள். ரோஹில்லா படைகளுடன் ஆப்கான் படைகள் இணைந்ததால் இஸ்லாமிய படைகள் ஒன்றானது. ஆப்கான் படைகள் தங்குவதற்கான நீண்ட கால நிதி தேவையை ரோஹில்லா பூர்த்தி செய்தது.
முதல் போரில் வெற்றி
ஆகஸ்ட், 1960 ல் மராத்திய படைகள் மெல்ல டெல்லி வந்தடைந்தது. யமுனை நதிக்கரையில் குஞ்ச்புரா எனும் இடத்தில் வெறும் 15, ௦௦0 ஆப்கன் வீரர்கள் மட்டும் முகாமிட்டு இருந்தனர். எஞ்சியுள்ள அப்கான் படைகள் துரானியையும் சேர்த்து ஆற்றின் கிழக்கு பக்கம் முகாமில் இருந்தனர்.மராத்திய படைகள் குஞ்ச்புரா பகுதியில் இருந்த ஆப்கான் படைகளை எதிர்கொண்டது. இதில் அமோக வெற்றி. மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கே முகாமிட்டது. அவர்களுடைய நீண்ட கால தேவைக்கான உணவு அவர்களின் டெல்லி முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டது. நாட்கள் மாதங்களானது.
பட்டினியின் கோரப்பிடியில்
அக்டோபர் மாதத்தில் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்த துரானி பாக்பட் எனும் இடத்தில் ஆற்றை கடந்து முகாமிட்டார். இது டெல்லியில் இருந்து உணவு வரும் பாதையாக உள்ளதால் மராத்திய படைகளுக்கான உணவு சுத்தமாக நிறுத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்தது. உணவு சுத்தமாக தீர்ந்துவிட்ட நிலையில் மராத்தியர்களின் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அனைத்தும் உயிரழந்தன.
பல நாட்கள் உணவருந்தாத மராத்திய வீரர்கள் அவர்களின் தளபதி சதாசிவ ராவிடம் பட்டினியால் சாவதை விட போரை சந்திப்பதே மேல் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
ஜனவரி, 1761 ல் இரு அணிகளும் பானிபட்டில் சந்தித்து கொண்டனர். நடந்த போரில் பலவீனமான மராத்திய வீரர்களால் சரியாக பதில் தாக்குதல் கொடுக்க முடியவில்லை. சுமார் 6௦, 00௦ பேர் போரில் மாண்டனர். பல்லாயிரம் மக்கள் காயமடைந்தனர். பலமுனை தாக்குதல் நடந்ததால் யாத்திரைக்காக கூட்டி வந்த போராளிகளுக்கு அவர்களால் சரியான பாதுகாப்பு வழங்க முடியவில்லை.
போர் நடந்த மறுநாள் சுமார் 40, 000 மராத்திய மக்களை ஒரே நாளில் கொன்று குவித்தனர்.
இந்த போருக்கு பின்னர் மராத்தியர்கள் எல்லை விஸ்தரிப்புகளை முழுவதுமாக நிறுத்திக்கொண்டனர். பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மிர் உள்ளிட்ட கங்கை சமவெளி பகுதிகளை துரானிக்கு அளித்தனர். மராத்திய பேரரசு முழுவதும் சிதைந்து தனித்தனி நாடுகளாக உருவெடுத்தது. வலுவான எந்த பேரரசும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்தி தங்கள் எல்லைகளை விரிவுபடுதிக்கொண்டது.



Comments
Post a Comment